நள்ளிரவில் தனியே சைக்கிளில் சென்று ஆய்வு செய்த பெண் ஐபிஎஸ்!!

நள்ளிரவில் தனியே சைக்கிளில் சென்று ஆய்வு செய்த பெண் ஐபிஎஸ்!!

Update: 2022-03-25 08:58 GMT

சென்னை வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதி .பி.எஸ். நேற்று நள்ளிரவு திடீரென தனியாக சைக்கிளில் சென்று வடக்கு மண்டல பகுதிகளையும், காவல் நிலையங்களையும் ஆய்வு செய்தார்.

வாலாஜா சாலை முத்துசாமி பாலத்தில் ஆரம்பித்து எஸ்பிளனேட் சாலை, மின்ட் தெரு, மூலக்கொத்தளம் பகுதி வழியாக வைத்தியநாதன் பாலத்தைக் கடந்து தண்டையார்பேட்டை காவல் நிலையம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.

கோட்டை காவல் நிலையம், எஸ்பிளனேட், பூக்கடை காவல் நிலையம், யானைக்கவுனி காவல் நிலையம், வண்ணாரப்பேட்டை, ஆர்.கே நகர், புதிய வண்ணாரப்பேட்டை காவல் நிலையம், தண்டையார்பேட்டை ஆகிய 8 காவல் நிலையங்களுக்கு சென்று இரவு நேர பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இப்பகுதிகளில் சைக்கிளில் சென்றபோது இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த காவலர்கள், இரவு நேர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

ஐபிஎஸ் ரம்யா பாரதி சரியாக இரவு 2:45 மணிக்கு ஆரம்பித்து 4.30 மணி வரை வடக்கு மண்டல பகுதிகள் மற்றும் காவல் நிலையங்களை ஆய்வு செய்தார். நள்ளிரவு நேரத்தில் சென்னை வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதி .பி.எஸ்.-ன் இந்த செயலை காவல்துறை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

newstm.in

Similar News