இரண்டு குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை! வரதட்சணை கொடுமையா?
இரண்டு குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை! வரதட்சணை கொடுமையா?
சேலத்தில் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னவீராணம் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் ராஜேஷ்குமார் - மனைவி குறிஞ்சி தமிழ் ( 29) இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு விமல் பிரனவ் (7), கார்த்திக் பிரனவ் (4) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.
கணவன் மனைவி இடையேயும், மாமியார் மருமகள் இடையேயும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தகராறின்போது, குறிஞ்சிமலர் தனது இரண்டு மகன்களையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வீராணம் போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு வந்த குறிஞ்சி தமிழ் உறவினர்கள், அடிக்கடி வரதட்சணை காரணமாக அடித்து துன்புறத்தப்பட்டு வந்ததாகவும், இது திட்டமிட்ட கொலை என்றும், எனவே கணவர், மாமியார், மாமனாரை கைது செய்யக் கோரியும், சடலங்களை பிரேதபரிசோதனைக்காக எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, கணவன் ராஜேஷ் மற்றும் மாமியார் முத்தம்மாள்,மாமனார் ஹரிராமன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே சேலம் மாநகர துணை கமிஷனர் மாடசாமி விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in