தொண்டையில் இறைச்சி சிக்கியதால் உயிரிழந்த பெண்!!

தொண்டையில் இறைச்சி சிக்கியதால் உயிரிழந்த பெண்!!

Update: 2022-05-25 20:32 GMT

கேரள மாநிலம் செத்தலூர் பகுதியைச் சேர்ந்த ஆஷிக் என்பவரின் மனைவி பாத்திமா ஹானான், திருமணத்திற்கு பிறகு தனியார் கல்லூரி ஒன்றில் தனது படிப்பை தொடர்ந்து வந்தார்.

இந்நிலையில் வீட்டில் ஹானான் இறைச்சி உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது தொண்டையில் இறைச்சி துண்டு ஒன்று சிக்கிக் கொண்டது. இதனால் அவர் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டார்.

அவரை உடனே அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு தொடர் சிகிச்சையிலிருந்த ஹானான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாப்பிடும்போது இறைச்சி துண்டு தொண்டையில் சிக்கியதால் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News