பட்டா கேட்டு வந்த பெண் பலாத்காரம்.. கிராம நிர்வாக அலுவலருக்கு போலீஸ் வலை..!

பட்டா கேட்டு வந்த பெண் பலாத்காரம்.. கிராம நிர்வாக அலுவலருக்கு போலீஸ் வலை..!

Update: 2022-06-30 04:30 GMT

கடலூர் வண்ணாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (43). இவர் சேடப்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், கடலூரை சேர்ந்த திருமணமான 28 வயது பெண் ஒருவர் கடந்த ஆண்டு அதே பகுதியில் வீட்டுமனை வாங்கியுள்ளார்.

பின்னர், அந்த வீட்டு மனைக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக அந்தப் பெண் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று வந்த போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பிறகு கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்காக அந்த பெண், சென்னை அம்பத்தூரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார்.

அப்போது அந்த பெண் இளையராஜாவை செல்போனில் தொடர்பு கொண்டு, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு சம்பந்தமான விவரங்களை தொடர்ந்து கேட்டு வந்தார்.

இதில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் வீடியோ காலில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்துள்ளனர்.

இதற்கிடையே, இளையராஜா அந்த இளம்பெண்ணை நேரில் சந்திக்க வரவேண்டும் என்று கூறி மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த பெண், இளையராஜாவுடன் மாமல்லபுரம் சென்றுள்ளார். அங்கு இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் இருவரும் அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது இளையராஜா, அந்த பெண்ணை வற்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில், இருவரும் உல்லாசமாக இருந்ததை செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த இளையராஜா, அந்த பெண்ணை மிரட்டி வந்துள்ளார். இதில் மனமுடைந்த அந்த பெண், கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் இளையராஜா மீது இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறார்.

Similar News