வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!!

வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!!

Update: 2022-05-23 08:48 GMT

சென்னையில் வீட்டிற்குள் புகுந்து கத்திமுனையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

அடையாறை சேர்ந்த 43 வயது பெண் ஒருவர் துப்பரவு தொழிலாளியாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2009ஆண்டு கணவரை இழந்த அவர் தனது மகள்களைத் திருமணம் முடித்துகொடுத்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இரவு அந்த பெண் வேலை முடித்து வீட்டிற்குச் சென்ற நிலையில், வீட்டின் வெளியே அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவரிடம் யார் என கேட்டுள்ளார்.

அப்போது, அந்த இளைஞர் அந்த பெண்ணின் வாயை மூடி வீட்டிற்குள் தள்ளி கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாகக் கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அவரை அரைநிர்வாணமாக வீடியோ எடுத்து, தொலைபேசி எண்ணை வாங்கி கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதையடுத்து அவரை தொடர்பு கொண்டு இதுப்பற்றி போலீஸாரிடம் சொல்லக்கூடாது எனவும், கூறினால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். மேலும் அழைக்கும் போது தனது ஆசைக்கு இணங்கவேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தனது மகளிடம் இது குறித்து கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அடையாறு அனைத்து மகளிர் போலீஸாரிடம் புகார் அளித்த நிலையில் மெரினா கடற்கரையில் அந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில் அந்த நபர் திருவல்லிகேணி பகுதியை சேர்ந்த விஷால் என்பதும், அவர் கஞ்சா மற்றும் மதுபோதையில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து பாலியியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட விஷாலிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Similar News