மகளிர் உலகக்கோப்பை- ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் அபார சதம்.. இந்தியா 317 ரன்கள் குவிப்பு

மகளிர் உலகக்கோப்பை- ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் அபார சதம்.. இந்தியா 317 ரன்கள் குவிப்பு

Update: 2022-03-12 10:25 GMT

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் சதம் விளாசி அசத்தியுள்ளனர். 

12ஆவது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் 10வது லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசுடன் விளையாடி வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அபாரமாக ஆடி சதமடித்தார். 78 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய போது ஹர்மன்ப்ரீத் உடன் இணைந்து இன்னிங்ஸை ஸ்டெடி செய்தார் ஸ்மிருதி.

முக்கியமான போட்டிகளில் திறம்பட செயல்பட்டு அணிக்கு தன்னால் முடிந்த பங்களிப்பை கொடுப்பவர் என்பதை இந்த சதத்தின் மூலம் நிரூபித்துள்ளார் ஸ்மிருதி. அவர் சிறப்பாக விளையாடி 119 பந்துகளில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸையும் சேர்த்து கடைசியாக விளையாடிய ஐந்து இன்னிங்ஸில் இரண்டு சதம் மற்றும் ஒரு சதத்தை அவர் பதிவு செய்துள்ளார்.  கடந்த 2017 உலகக் கோப்பை தொடரிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அவருக்கு பக்கபலமாக நின்ற ஹர்மன்பிரீத் கவுரும் சதமடித்து அசத்தினார். இவர் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மொத்தத்தில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 317 குவித்தது. இதனையடுத்து பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. 


newstm.in

Tags:    

Similar News