மகளிர் ஹாக்கி ட்ரெண்ட் செட்டர் எல் வேரா பிரிட்டோ காலமானார்..!!

மகளிர் ஹாக்கி ட்ரெண்ட் செட்டர் எல் வேரா பிரிட்டோ காலமானார்..!!

Update: 2022-04-30 05:20 GMT

1960களில் ஹாக்கி இந்திய ஆண்கள் மத்தியில் புகழ்பெற்ற விளையாட்டாக திகழ்ந்தது. அப்போது இந்த விளையாட்டை பெண்கள் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல.இந்த ஹாக்கியை கடைக்கோடி பெண்களுக்கும் கொண்டு சென்றவர் எல் வேரா பிரிட்டோ (Elvera Britto ). இவரை ஹாக்கியின் ட்ரெண்ட் செட்டர் என்றே அழைக்கின்றனர்.

கொல்கத்தாவில் பிறந்த இவர் பெங்களூரு அணியின் கேப்டனாகவும் இந்திய அணியின் தலைவராகவும் பொறுப்பேற்று அணியை வழி நடத்தியுள்ளார்.
இவரின் தனி திறமை மற்றும் விளையாட்டு திறனை கருத்தில் கொண்டு இவருக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளன.

1965ஆம் ஆண்டு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. ஹாக்கியில் ஆண்களுக்கு போலவே பெண்களுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் எல் வேரா பிரிட்டோ.இந்நிலையில் அவர் பெங்களூரில் காலமானார்...

Tags:    

Similar News