2 தலைகள், 3 கைகளுடன் ஒட்டிப்பிறந்த அதிசயக் குழந்தை.. ஆனால்.. !!

2 தலைகள், 3 கைகளுடன் ஒட்டிப்பிறந்த அதிசயக் குழந்தை.. ஆனால்.. !!

Update: 2022-03-30 19:47 GMT

பெண் ஒருவருக்கு இரண்டு தலை, மூன்று கைகளுடன் குழந்தை பிறந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் ஷாஹின் பகுதியை சேர்ந்தவர் ஜாவ்ரா. திருமணம் முடிந்து கருவுற்ற இப்பெண்ணுக்கு அண்மையில் ஒரே பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் ஒட்டி குழந்தை பிறந்துள்ளது. மூன்றாவது கையானது, குழந்தையின் இரண்டு தலைகளுக்கும் இடையே உள்ளது.

இதைத்தொடர்ந்து, சிறிது நேரம் ரத்லாம் குழந்தைகள் மருத்துவனையில் உள்ள சிறப்பு குழந்தைகள் பிரிவில் சிறிது நேரம் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் மேல்சிகிச்சைக்காக அந்த குழந்தை இந்தூர் மஹாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
 

முன்னதாக, குழந்தை வயிற்றுக்குள் இருந்த போது செய்த சோதனையில் இரட்டையர்கள் போன்றே தெரிந்துள்ளது. இதனால் இரட்டை குழந்தை பிறக்கும் என மகிழ்ச்சியில் இருந்துள்ளனர்.

இதுதொடர்பாக மருத்துவர் நாவித் குரோஷி கூறும்போது, குழந்தையின் நிலமை கவலைக்கிடமாகவே உள்ளது. இதுபோன்ற நிலையில், பெரும்பாலான குழந்தைகள் கருவிலே உயிரிழந்துவிடும், அல்லது பிறந்து 48 மணி நேரத்தில் உயிரிழந்துவிடும். இதுபோன்ற நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யவும் வாய்ப்புகள் உள்ளது. எனினும், 60 முதல் 70 சதவீத குழந்தைகள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை, என்று அவர் கூறுகிறார்.

தற்போது குழந்தையின் தாய் ரத்லாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை மட்டும், இந்தூர் மஹாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. 


newstm.in
 

Tags:    

Similar News