நிலச்சரிவின்போது ஃபிரிட்ஜ்ஜிற்குள் ஓழிந்து உயிர் தப்பிய அதிசய சிறுவன் !!
நிலச்சரிவின்போது ஃபிரிட்ஜ்ஜிற்குள் ஓழிந்து உயிர் தப்பிய அதிசய சிறுவன் !!
இயற்கை வளமும், சுற்றுலா தலமும் நிறைந்த பிலிப்பைன்ஸ் நாட்டில் இயற்கை சீற்றங்களும் அடிக்கடி நிகழும். இது அந்நாட்டு மக்களுக்கு வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதில் இருந்து தற்காத்துகொள்ளவும் அவர்கள் தயாராக இருப்பர்.
இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் லேய்ட் மாகாணத்தில் மெகி என்ற புயலால் கனமழையும், வெள்ளமும், நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சாலைகள் அடித்துச்செல்லப்பட்டு போக்குவரத்து அடியோடு தடைப்பட்டது. குறிப்பாக பேபே நகரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டபோது ஏராளமான மக்கள் அதில் சிக்கி உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகள இழந்தனர்.
இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி ஒரு நாளுக்கு பிறகு சிறுவன் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதாவது, சிஜே ஜஸ்மே என்ற 11 வயது சிறுவன் நிலச்சரிவு ஏற்பட்டபோது வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டிக்குள் ஒளிந்துகொண்டான். வீடு நிலச்சரிவில் சிக்கியப்போதும் குளிர்சாதன பெட்டியும் சிக்கியது. எனினும் அது உடையாமல் அப்படியே இருந்துள்ளது.
பின்னர் நிலச்சரிவு பகுதிகளில் மீட்பு பணி நடைபெற்றபோது, அங்கே குளிர்ச்சாத பெட்டி ஒன்று கிடப்பதை வீரர்கள் கண்டறிந்தனர். அதை திறந்து பார்த்தபோது சிறுவன் பத்திரமாக இருந்துள்ளான். சுமார் 20 மனி நேரம் சிறுவன் குளிர்சாதன பெட்டிக்குள் பாதுகாப்பாக இருந்ததாக கூறப்படுகிறது.
சிறுவனை மீட்டபோது, தனது முதல் வார்த்தையாக ‘பசிக்கிறது’ என கூறியுள்ளான். நிலச்சரிவில் அவனது காலில் அடிப்பட்டுள்ள நிலையில் அவனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது சிறுவன் பத்திரமகா இருப்பதாகவும், மருத்துவமனையில் சிறுவனின் உடல்நிலை இயல்பான நிலையில் இருப்பபதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலச்சரிவில் சிறுவனின் தாய் மற்றும் இளைய சகோதரன் ஆகியோரை காணவில்லை. சிறுவனின் தந்தை நிலச்சரிவில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்புகுழுவினர் தேடி வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நிலச்சரிவு காரணமாக இதுவரை 172 பேர் உயிரிழந்துள்ளனர். 200 பேர் படுகாயமடைந்து இருக்கின்றனர்.
newstm.in