6 மணி நேரத்தில் 24 முட்டைகள் போட்ட அதிசய கோழி!!

6 மணி நேரத்தில் 24 முட்டைகள் போட்ட அதிசய கோழி!!

Update: 2022-06-15 08:12 GMT

கேரளாவில் 6 மணி நேரத்தில் 24 முட்டைகள் போட்ட கோழியை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியை சார்ந்த பிஜு என்பவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 20க்கும் மேற்பட்ட bv -380 ரக கோழிகளை வாங்கினார். அதில் ஒரு கோழி பிஜுவின் மகளை வெகுவாக கவர்ந்தது.

இதையடுத்து அவரது மகள் கோழிக்கு சின்னு என்று பெயரிட்டு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கோழி தனது காலை தூக்கி நடக்க காலில் அடிபட்டிருக்கும் என பிஜு, சின்னு கோழியின் காலில் தைலம் போட்டு விட்டுள்ளார்.

காலை சுமார் 8:30 மணி அளவில் கோழி முதலில் ஒரு முட்டை போட்டது. சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து 24  முட்டைகளை போட்டு வீட்டாரையே ஆச்சரியப்படுத்துள்ளது.

இந்த தகவல் அறிந்த பலரும் அதிசய சின்னு கோழியையும் 24 முட்டைகளையும் பார்க்க பிஜுவின் வீட்டில் குவிந்தனர். 6 மணி நேரத்தில் 24 முட்டைகளை போட்ட சின்னு கோழி அதிசய கோழி என சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

newstm.in

Similar News