பகலில் வேலை.. இரவில் 10 கி.மீ. ஓட்டம்.. இளைஞரின் வாழ்க்கை போராட்டம் !!
பகலில் வேலை.. இரவில் 10 கி.மீ. ஓட்டம்.. இளைஞரின் வாழ்க்கை போராட்டம் !!
ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியத்திற்காக தினமும் நள்ளிரவு 10 கி.மீ., ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் வசித்து வரும் 19 வயது இளைஞர் பிரதீப் மெஹ்ரா, 'மெக் டொனால்ட்ஸ்' உணவகத்தில் பணியாற்றி வருகிறார். தினமும், இரவில் பணி முடித்து 10 கி.மீ., தொலைவில் உள்ள வீட்டுக்கு நள்ளிரவில் ஓடி திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்தநிலையில், தேசிய விருது பெற்ற, 'பாலிவுட்' திரைப்பட இயக்குனரும், எழுத்தாளருமான வினோத் கப்ரி
நள்ளிரவில் காரில் செல்கையில், இந்த இளைஞர் வேகமாக ஓடி செல்வதை கண்டு ஆச்சரியம் அடைந்தார். பின்னர் காரின் வேகத்தை குறைத்து ஓட்டியபடியே, அவருடன் பேச்சு கொடுத்தார்.
அப்போது, நள்ளிரவில் இத்தனை வேகமாக ஓடி எங்கே செல்கிறீர்கள். காரில் ஏறுங்கள் நான் இறக்கி விடுகிறேன், என வினோத் கூறினார். இதை மறுத்த பிரதீப், ராணுவத்தில் சேர வேண்டும் என்பது என் லட்சியம். அதற்கு பயிற்சி எடுப்பதற்காகவே தினமும் இப்படி ஓடுகிறேன். நள்ளிரவில் மட்டுமே, அதற்கு நேரம் கிடைக்கிறது. காலையில் சமையல் செய்வதால் ஓடுவதற்கு நேரம் இல்லை என பதில் அளித்தார்.
பிரதீப் உடனான இந்த உரையாடலை, தன் 'மொபைல் போனில்' படம் பிடித்த வினோத் கப்ரி, அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அதை 12 மணி நேரத்தில், 38 லட்சம் பேர் பார்த்து உள்ளனர். 1.53 லட்சம் பேர் 'லைக்' குறியிட்டுள்ளனர்.இந்த வீடியோ, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், 'டிரெண்டிங்' ஆகிஉள்ளது.
Neestm.in