உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி.. அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை..!

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி.. அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை..!

Update: 2022-04-16 11:43 GMT

“பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக அரசு, அரசுப் பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும்போது பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க முன்வர வேண்டும்.

தமிழக பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியாக இருக்கிறது. உடற்கல்வி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த 25 ஆண்டுகளாக பதிவு மூப்பு அடிப்படையில் அரசுப் பணியை எதிர்நோக்கி காத்துக் கிடக்கிறார்கள்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு முறையின் மூலம் உடற்கல்வி ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதை தவிர்த்து பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

எனவே, பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற பதிவு மூப்பு பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Similar News