சுகாதாரத்துறையில் பணி.. விண்ணப்பிக்க வரும் 25-ம் தேதி கடைசி நாள்..!
சுகாதாரத்துறையில் பணி.. விண்ணப்பிக்க வரும் 25-ம் தேதி கடைசி நாள்..!
கோவை சுகாதாரத்துறையில் நிரப்பப்பட உள்ள தற்காலிக பணியிடங்களுக்கு வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கோவை மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் மூலம் 5 ஆர்பிஎஸ்கே பார்மசிஸ்ட், தலா ஒரு ஆடியோலஜிஸ்ட், ஆடியோ மெட்ரிக் அசிஸ்டன்ட், இன்ஸ்டிரக்டர் ஃபார் யங் ஹியரிங் இம்போர்ட், 2 மல்டி பர்போஸ் ஹெல்த் வொர்க்கர், 3 எம்எம்எயு கிளீனர் கம் அட்டன்டர், 2 டென்டல் அசிஸ்டென்ட் போன்ற பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதுகுறித்த விவரங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் காணலாம். விருப்பமுள்ளவர்கள் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள், புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை வரும் 25-ம் தேதி மாலை 5 மணிக்குள் ரேஸ்கோர்சில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்.
இதற்கான நேர்காணல் வரும் ஏப்ரல் 4-ம் தேதி காலை 10 மணிக்கு சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.