#BIG NEWS:- இனி வாரம் 3 நாட்கள் விடுமுறை, ஆனால் முழு சம்பளம்.. புதிய திட்டம் அமல்..!
#BIG NEWS:- இனி வாரம் 3 நாட்கள் விடுமுறை, ஆனால் முழு சம்பளம்.. புதிய திட்டம் அமல்..!
இங்கிலாந்து முழுவதிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களில், ஊழியர்களுக்கு சம்பள இழப்பு இல்லாமல் ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முதல் இங்கிலாந்தில் உள்ள பல வங்கிகள், பராமரிப்பு இல்லங்கள், அனிமேஷன் ஸ்டுடியோக்கள் உட்பட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இதில் பங்கு கொண்டுள்ளன.
தொழிலாளர்கள் தங்கள் உட்சபட்ச உற்பத்தி திறனை வெளிப்படுத்துவார்கள் என்ற புரிதலின் பெயரில் அவர்களுக்கு 100 சதவீத ஊதியத்தை கொடுப்பதற்கு இந்த நிறுவனங்கள் முடிவு செய்திருக்கின்றன.
இந்த திட்டமானது தொழிலாளர்களின் நலனிலும் உற்பத்தி திறனை அதிகரிப்பதிலும் எந்த அளவிற்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது என நிறுவன அமைப்பாளர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளனர். இந்தத் திட்டம், நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்மை சேர்க்கும் என அவர்கள் கருதுகின்றனர்.