ரஷ்ய வீரர்களுக்கு தடை… உலக தடகள அமைப்பு அதிரடி!!

ரஷ்ய வீரர்களுக்கு தடை… உலக தடகள அமைப்பு அதிரடி!!

Update: 2022-03-02 07:47 GMT

ரஷ்யா மற்றும் பெலராஸ் நாட்டின் வீரர்களுக்கு தடை விதிப்பதாக உலக தடகள அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யா மீது அதிருப்தியில் உள்ளன. இதனையடுத்து ரஷ்யாவின் மீது உலக நாடுகள் தொடர்ந்து பொருளாதாரத்தடை விதித்து வருகின்றன.

பெலாரஸ் நாட்டில் வைத்து உக்ரைன் மற்றும் ரஷ்யா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைன் மீதான போர் தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷோய்கு தெரிவித்தார்.

உலக நாடுகளின் கடும் கண்டனங்களுக்குப் பிறகு ரஷ்யா ராணுவத் தாக்குதலிலிருந்து பின்வாங்கவில்லை. இந்நிலையில், உலக தடகள அமைப்பு ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.‘உலக தடகள அமைப்பின் கீழ் நடைபெறும் அனைத்துவகையான போட்டிகளிலிலும் ரஷ்ய வீரர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டின் அனைத்து தடகள வீரர்கள், உதவியாளர்கள், அதிகாரிகள் வரும் காலங்களில் நடைபெறவுள்ள தடகள போட்டிகளிலில் பங்கேற்க தடைவிதிக்கப்படுகிறது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.

உலக தடகள சாம்பியன்ஷிப் ஒரேகான் 22, உலக தடகள உள்விளையாட்டு சாம்பியன்ஷிப் பெல்க்ரேட் 22, உலக தடகள விரைவு நடை குழு சாம்பியன்ஷிப் மஸ்கட் 22 ஆகிய தொடர்களிலிலும் தடைவிதிக்கப்படுகிறது.

newstm.in

Similar News