உலகக்கோப்பை கிரிக்கெட்.. பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றிபெற்ற இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட்.. பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றிபெற்ற இந்தியா

Update: 2022-03-06 16:54 GMT

உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியுள்ளது.

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இன்றைய முக்கிய லீக் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.

முதலில் பேட் செய்த இந்திய அணியில் அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். எனினும் ஸ்மிருதி மந்தனா 52 ரன்களும்,  அடுத்து வந்தவர்களில் தீப்தி ஷர்மா 40 ரன்கள் எடுத்தார். மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கவுர் ரிச்சா கோஷ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காத நிலையில், அடுத்து இணைந்த ஸ்னே ராணா, பூஜா வஸ்த்ராகர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 7வது விக்கெட்டுக்கு இந்த  ஜோடி 122 ரன்களை பார்ட்னர்ஷிப் செய்தது.

ராணா 53 ரன்களும், பூஜா 67 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 244 ரன்களை எடுத்தது. 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் வீராங்கனைகள் களத்தில் இறங்கினர்.

இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் வீராங்கனைகள் ஒருவர் பின் ஒருவராக நடையைக் கட்டினர். அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சித்ரா அமீன் 30 ரன்களும் டயானா பேக் 24 ரன்களும் எடுத்தனர்.

43 ஓவர் முடிடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்து 107 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய வீராங்கனை ராஜேஷ்வரி கெய்க்வாட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது இல்லை என்ற சாதனை பயணம் தொடர்கிறது.  

newstm.in

Tags:    

Similar News