உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை திடீர் ஓய்வு அறிவிப்பு!!
உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை திடீர் ஓய்வு அறிவிப்பு!!
உலக தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள 25 வயதான ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆஷ்லி சுமார் 121 வாரங்களாக உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். குறுகிய காலத்தில் 15 சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ள அவர், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், 2021 விம்பிள்டன் கோப்பை, 2019 பிரன்ஞ்ச் ஓபன் டென்னிஸ் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளார்
தொடர்ந்து பல வெற்றிகளை குவித்து வந்த ஆஷ்லி பார்ட்டி, தனது 25ஆவது வயதில் ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
தனக்கு தனிப்பட்ட முறையில் பல கனவுகள் உள்ளதாகவும், உலகம் முழுவதும் சுற்றி தனது குடும்பத்தையும், சொந்த ஊரையும் பிரிந்து இருக்க தன்னால் முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் டென்னிஸ் விளையாட்டை மிகவும் நேசிப்பதாகவும், தனது வாழ்வில் டென்னிஸ் என்றும் ஒரு அங்கமாக இருக்கும் என்று கூறியுள்ள அவர், தனது வாழ்வின் அடுத்த பகுதியை ஒரு சாதாரண நபராக அனுபவிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
newstm.in