உலக அளவில் ட்ரெண்டான பீஸ்ட்… வச்சி செய்யும் நெட்டிசன்கள்!!

உலக அளவில் ட்ரெண்டான பீஸ்ட்… வச்சி செய்யும் நெட்டிசன்கள்!!

Update: 2022-05-17 10:50 GMT

விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் ரிலீஸான இத்தனை நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் உலக ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.

இந்த ட்ரெண்டுக்கு காரணம் ஓய்வுப்பெற்ற இந்திய விமானப் படை விமானி சிவராமன் சஜ்ஜன் பதிவிட்ட ட்வீட். விஜய் பாகிஸ்தானில் இருந்து போர் விமானத்தை ஓட்டி வருவதில் பல சந்தேகங்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் இந்திய அளவில் டிரெண்டான ட்வீட், பின்னர் சர்வதேச டிரெண்டாக மாறிப்போனது. போர் விமானங்களை இயக்கும் பயணிகள் ஆக்சிஜன் மாஸ்க்கும், ஹெல்மெட்டும் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

ஏனெனில் ஜெட் விமானம் செல்லும் வேகத்தில் நமக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். மேலும் காற்றின் வேகத்திலும், ஜெட்டின் ஒலியிலும் காது சவ்வுகள் கிழிந்து விடும்.

ஆனால் விஜய் மாஸ்க்கும், ஹெல்மெட்டும் அணிந்திருக்க மாட்டார். அதேபோல, எதிரே மற்றொரு ஜெட்டில் வரும் பெண் விமானி விஜய்யை பார்த்து, சல்யூட் அடிப்பார். அதற்கு விஜய்யும் பதில் சல்யூட் அடிப்பார்.

சாதாரணமாக ஒரு ஜெட் விமானம் மணிக்கு 1,500 கி.மீ. வேகத்தில் பறக்கும். அந்த வேகத்தில் செல்லும் போது எதிரே வரும் ஜெட் விமானம் மைக்ரோ வினாடிகளில் கடந்து சென்றுவிடும்.

அப்படி இருக்கும் போது, எதிரே வரும் விமானிக்கு சல்யூட் அடிப்பது எல்லாம் ரொம்ப ஓவர் என உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் நெட்டீசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

newstm.in

Similar News