உலகம் முழுவதும் திடீரென முடங்கியது டுவிட்டர் வலைத்தளம் !

உலகம் முழுவதும் திடீரென முடங்கியது டுவிட்டர் வலைத்தளம் !

Update: 2022-02-12 07:15 GMT

உலகம் முழுவதும் நள்ளிரவு டுவிட்டர் சமூக வலைத்தள சேவை திடீரென முடங்கியது.

டுவிட்டர் மற்றும் யூடியூப் சமூகவலைதளங்களில் முன்னோடியாக உள்ளது. இந்த இணையதள பக்கங்களை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போது கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டுவிட்டர் மற்றும் யூடியூப் பக்கங்கள் முடங்கின. இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரேசில், இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளில் இந்த பாதிப்பு காணப்பட்டது. இதனால், டுவிட்டர் மற்றும் யூடியூபை பயன்படுத்தமுடியாமல் பயனாளர்கள் அவதியடைந்தனர். அவதியடைந்த டுவிட்டர் பயனாளர்கள் புகாரளித்தனர்.

ஒரு மணி நேரத்திற்கும் பிறகு டுவிட்டர் வலைதளம் செயல்பாட்டிற்கு வந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது.

ட்வீட்களை இடுகையை தடுக்கும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது, நிலைமை சீரடைந்து விட்டதாகவும் டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்தது. மேலும் தொழில்நுட்ப கோளாறுக்கு பயனாளர்களிடம் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியது.


newstm.in

Similar News