ஆதார் எண் வைத்து ரேஷனில் பொருட்கள் பெறலாம்!!

ஆதார் எண் வைத்து ரேஷனில் பொருட்கள் பெறலாம்!!

Update: 2022-03-17 10:49 GMT

ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு, குடும்ப அட்டை தேவையில்லை, ஆதார் எண் வைத்து பொருட்களை வாங்கலாம் என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி நேரத்தில் மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி பியூஷ் கோயல் பேசி போது, நாட்டில் உள்ள 77 கோடி மக்கள் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அரசின் சலுகைகளைப் பெறுவதில் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இந்த முயற்சி பிரதமர் நரேந்திர மோடியால் உருவாக்கப்பட்டது என்றார்.

இந்த வசதியின் மூலம், புலம்பெயர்ந்த பயனாளி ஒருவர் அவர் பணிபுரியும் இடத்தில் ரேஷன் பெற முடியும், அதே நேரத்தில் அவர் அல்லது அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு திரும்பிய பின் உரிமையுள்ள ரேஷனில் தங்கள் பங்கைப் பெற அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.

பிரதமரின் முன்முயற்சியால், தொற்றுநோய்களின் போது ஒரு நபர் கூட பசியுடன் இருக்கவில்லை என்பது மகத்தான பெருமைக்குரிய விஷயம். அதற்கு மக்களும் எங்களை நல்ல பலனை கொடுத்துள்ளனர் என சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா..,வின் வெற்றியை சுட்டிக்காட்டினார்.

புலம்பெயரும் தொழிலாளர்கள் வேறு ஊர்களுக்கு இடம் மாறி செல்லும்போது, ரேஷன் பொருட்கள் வாங்க புதிய ரேஷன் கார்டு பெற தேவையில்லை. ஆதார் எண்ணை  ரேஷன் கடையில் தெரிவித்து, பயோமெட்ரிக் மூலம் அடையாளத்தை உறுதி செய்து கொண்டு, பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.

இதன் மூலம் புதிய ரேஷன் கார்டு பெறும் பிரச்னைக்கும், போலி ரேஷன் கார்டு பிரச்னைக்கும் தீர்வு காண முடியும். தொழில்நுட்பம் அடிப்படையிலானஒரே நாடு ஒரே ரேஷன் கார்டுதிட்டத்தால் இது சாத்தியம் ஆகியுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

newstm.in

Similar News