கூகுள் மேப்ஸ் மூலம் டோல்கேட் கட்டணம் அறியலாம்.. வாங்க, எப்படின்னு பார்ப்போம்..!

கூகுள் மேப்ஸ் மூலம் டோல்கேட் கட்டணம் அறியலாம்.. வாங்க, எப்படின்னு பார்ப்போம்..!

Update: 2022-06-23 04:40 GMT

கூகுள் மேப்ஸ், தொடர்ந்து பல்வேறு வசதிகளுடன் தனது சேவையை மேம்படுத்திக் கொண்டே வருகிறது. அந்த வகையில், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது எந்த வழியில் பயணிப்பது, எவ்வளவு தொலைவு, பயண நேரம் உள்ளிட்டவற்றை தெரியப்படுத்திக் கொண்டிருந்த கூகுள் மேப்ஸ், இனி வழியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் எத்தனை, அதற்கான மொத்த கட்டணம் எவ்வளவு ஆகும் என்பதையும் தெரிவிக்கும்.

இதை எவ்வாறு அறிந்து கொள்வது..?

கூகுள் மேப்ஸ் செயலியை உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடத்தையும், செல்ல வேண்டிய ஊரையும் சரியாகப் பதிவிடுங்கள்.

அனைத்து தகவல்களுடன், அங்கிருக்கும் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை மற்றும் அதன் ஒட்டுமொத்த கட்டணம் ஆகியவையும் அதில் தெரிவிக்கும் வகையில் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.

சுங்கக் கட்டணத்தைப் பார்த்து நீங்கள் அதிர்ச்சி அடைவதாக இருந்தால் உங்களுக்கு இன்னொரு வாய்ப்பும் இருக்கிறது. இதுதான் சுங்கச்சாவடிகள் இல்லாத சாலைகள்.

அதாவது, சுங்கச்சாவடி இல்லாத சாலைகள் அல்லது சுங்கச்சாவடி இருக்கும் சாலைகள் என்ற வாய்ப்பில் ஒன்றை தேர்வு செய்தும் நீங்கள் பாதையைத் தேடலாம்.

நீங்கள் சுங்கக் கட்டணம் செலுத்த விரும்பவில்லை என்றால், சுங்கச்சாவடி இல்லாத பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். அதற்கு அவாய்ட் டோல் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

Similar News