மனைவியை பிரிந்த ரோஷனை திருமணம் செய்ய விரும்பும் இளம் நடிகை !!
மனைவியை பிரிந்த ரோஷனை திருமணம் செய்ய விரும்பும் இளம் நடிகை !!
பாலிவுட் படங்களில் நடித்து வருபவர் நடிகை காயத்ரி பரத்வாஜ். பல் மருத்துவம் படித்த அவர் தனக்கு பிடித்தமான சினிமா துறைக்கு வந்துவிட்டார். சிறு வயது முதலே நடிகை என்ற ஆசை மனத்தில் இருந்தப்போதும், இவ்வளவு கால தாமதத்துக்கு அவர் காரணம் கூறுகிறார். அப்பா ஒரு விமானி, அம்மா சைக்காலஜிஸ்ட், தாத்தா, பாட்டி ஆகியோர் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். படித்த குடும்பம் என்பதால் படிப்பை முடித்த பிறகே நடிக்க அனுமதித்திருக்கிறார்கள், என தெரிவித்துள்ளார்.
முன்னாள் மிஸ் இந்தியா யுனைடெட் கான்டினென்ட் நடிகையுமான காயத்ரி பேட்டி ஒன்றில், மிகவும் பிடிக்க பாலிவுட் பிரபலம் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவரோ நடிகை ப்ரியங்கா சோப்ராவின் பெயரை கூறினார். மேலும் ப்ரியங்காவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விரும்புகிறார் காயத்ரி. ப்ரியங்கா பற்றி கண்டிப்பாக படம் எடுக்க வேண்டும். அவர் பலருக்கு முன்மாதிரியாக இருக்கிறார் என்றார்.
மேலும் ஒரு கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் தான் வேறலெவல். எந்த நடிகரை டேட் செய்ய விரும்புகிறீர்கள், எந்த நடிகரை திருமணம் செய்ய விரும்புகிறீர்கள் என்று காயத்ரியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது, நடிகர் சித்தாந்த் சதுர்வேதியை டேட் செய்ய விரும்புகிறேன். அவர் சிங்கிளா, இல்லையா என்று எனக்கு தெரியாது. ரித்திக் ரோஷனை திருமணம் செய்ய விரும்புகிறேன். அவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறார் என நினைக்கிறேன். சிறு வயதில் இருந்தே அவர் மீது எனக்கு ஒரு கிரஷ் என்றார்.
காதல் மனைவியான சூசன் கானை பிரிந்த ரித்திக் ரோஷன் தனியாக இருந்தார். இந்நிலையில் அவர் நடிகை சபா ஆசாதை காதலிப்பதாக கடந்த ஒரு வாரமாக பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவை தொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. இந்த நிலையில் நடிகை காயத்ரி இவ்வாறு கூறியுள்ளார்.
டிசம்பர் 2020 இல், காயத்ரி பரத்வாஜ் தனது முதல் இணைய நிகழ்ச்சியான ‘திண்டோரா’வை நடத்தினார். இதுதவிர ஒரு படத்திலும் நடித்துள்ளார். காயத்ரி பரத்வாஜ் ஹிருத்திக் ரோஷனை திருமணம் செய்ய விரும்புகிறார்
newstm.in