காதலன் கண்முன் இளம் பெண் பாலியல் வன்கொடுமை!!

காதலன் கண்முன் இளம் பெண் பாலியல் வன்கொடுமை!!

Update: 2022-03-30 06:45 GMT

கடலூரில்  காதலன் முன்பு காதலி மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் தலைமை தபால் நிலையம்  பகுதியில் பெண் ஒருவர்  தனியாக நின்று கொண்டிருந்தார்.  அப்போது ரோந்து பணியில் இருந்த போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், அப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது.

கம்மியம்பேட்டை பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இளம்பெண் தனது காதலனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் இருவரையும் ஒன்றாக செல்போனில் படம் பிடித்து மிரட்டியுள்ளனர்

இளம்பெண்ணின் காதலனை இருவர் பிடித்துக்கொள்ள காதலன் கண் எதிரே அந்தப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்அவர்களிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு மிரட்டி அனுப்பியதாக அப்பெண் கண்ணீர் மல்க கூறினார்.

இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் சந்தேகப்படும் நபர்களை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 3 இளைஞர்களை போலீசார் பிடித்து வந்து பெண்ணின் காதலனிடம்  காண்பித்தனர். அப்போது அவர் அடையாளம் காண்பித்தார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் குப்பன்குளம் பகுதியை சேர்ந்த கிஷோர்(19), சதிஷ் (19), புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞர்  என்பது தெரியவந்ததுஇதனையடுத்து மூவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Similar News