இளைஞர் மரணம்.. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் சிக்கிய முன்னாள் காதலி !!
இளைஞர் மரணம்.. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் சிக்கிய முன்னாள் காதலி !!
காதலிக்கு தனது மரணத்தை இளைஞர் ஒருவர் திருமண பரிசாக கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பலோட் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் அதே பகுதியைச் சேர்ந்தஇளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது.
காதலிக்கு திருமணம் முடிந்தபிறகு தான் அந்த தகவல் இளைஞருக்கு தெரியவந்துள்ளது. காதலியின் திருமணம் குறித்து அறிந்து அந்த இளைஞர் கடும் மன உளைச்சலிலிருந்து இருந்துள்ளார். மேலும் தனது நண்பர்களிடம் காதலி பிரிந்துவிட்டதாகக் கூறி புலம்பி வந்துள்ளார்.
நண்பர்கள் எவ்வளவு தேற்றியும் அவரால் மீளமுடியாத நிலையில், அந்த இளைஞர் தனது வீட்டு சுவரில், என் மரணம் தான், உனக்கான திருமண பரிசு என எழுதிவைத்துள்ளார். மேலும் இதை தனது செல்போனில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு போலீசார் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் தொங்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றதால் காதல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in