ஒரே வீட்டில் 8 மனைவிகளுடன் வாழும் இளைஞர்.. இரவுக்கு மட்டும் "அப்படி" ஒரு பிளான்..! !!

ஒரே வீட்டில் 8 மனைவிகளுடன் வாழும் இளைஞர்.. இரவுக்கு மட்டும் "அப்படி" ஒரு பிளான்..! !!

Update: 2022-02-01 18:45 GMT

8 மனைவிகளுடன் ஒருவர் ஒரே வீட்டில் ஒன்றாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் செய்தி உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. 

தாய்லாந்தைச் சேர்ந்தவர் ஓங் டாங் சோரூட். டாட்டூ கலைஞரான இவர் 8 பெண்களை திருமணம் செய்துக்கொண்டு, அவர்களுடன் ஒரே வீட்டில் ஒன்றாக எந்த வித சண்டையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார். நம்ப முடியவில்லையா? நம்பித்தான் ஆகவேண்டும். 8 மனைவிகளும் சோரூட் மீது மிகுந்த காதலுடனும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.   

சோரூட் தனது 8 மனைவிகளிடமும் பார்த்த இடத்திலேயே காதலில் விழுந்துள்ளார். இவரது முதல் மனைவி நாங் ஸ்பெரிட் என்பவரை ஒரு நண்பரின் திருமணத்தில் பார்த்துள்ளார். அவரை திருமணம் செய்த பிறகு இரண்டாவது மனைவி நாங் எல்லை மார்கெட்டில் பார்த்துள்ளார். நாங் எல்லிற்கு சோரூட்டின் முதல் திருமணம் குறித்து தெரியும் முன்பே அவரை திருமணம் செய்துவிட்டார்.

மூன்றாவது மனைவியை மருத்துவமனையிலும், நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது மனைவியை சமூகவலைத்தளங்களாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பார்த்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  அவரது 7வது மனைவியை அவரது தாயுடன் கோவிலுக்கு செல்லும் போது பார்த்துள்ளார். அவரது எட்டவது மனைவியை மற்ற மனைவிகளுடன் விடுமுறையை கழிக்க செல்லும் போது பார்த்துள்ளார். இவர்களை எல்லாம் பார்த்து உடனே காதலில் விழுந்து திருமணம் செய்துள்ளார்.

என்ன அதிசயம் என்றால் இவர்களை எல்லாம் பார்த்து உடனே காதலில் விழுந்து திருமணம் செய்துள்ளார். அத்தனை மனைவிகளுடனும் தற்போது ஒரே வீட்டில் ஒன்றாக தான் வாழ்ந்து வருகிறார். அவர்களுக்குள் சண்டையே வருவது இல்லையாம். அதற்கு முக்கியமான காரணம் சோரூட்டின் குணம் தான் என சொல்லப்படுகிறது.

இப்படியாக இவர்கள் இரவு படுக்கையை திட்டமிட்டு பகிர்ந்து கொள்வார்களாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் இவருடன் படுக்கையை பகிர்வாராம். ஒரு மனைவி சோரூட்டுடன் படுக்கையை பகிரும் போது மற்ற மனைவிகள் வேறு ரூமில் படுத்துக்கொள்வார்களாம். அத்தனை மனைவிகள் மீதும் பாரபட்சமின்றி அன்பை காட்டுவாராம். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

newstm.in

Tags:    

Similar News