ஓடும் காரின் மேல் போதையில் நடனமாடிய இளைஞர்கள்!!

ஓடும் காரின் மேல் போதையில் நடனமாடிய இளைஞர்கள்!!

Update: 2022-04-04 08:50 GMT

மதுபோதையில் ஓடும் கார் மீது நடனமாடிய இளைஞர்களை போலீஸார் கைது செய்து அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள டெல்லி -மீரட் விரைவுச் சாலையில் இளைஞர்கள் இருவர் குடிபோதையில் தங்கள் காரின் மீது நடனமாடினர். காரில் இருந்தவர்களும் மதுபோதையில் காரை இயக்கியுள்ளனர்.

சாலையில் சென்றவர்களில் ஒருவர் இளைஞர்கள் கார்மீது நடனமாடுவதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். காசியாபாத் காவல்துறையை டேக் செய்து அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

*{padding:0;margin:0;overflow:hidden}html,body{height:100%}img,span{position:absolute;width:100%;top:0;bottom:0;margin:auto}span{height:1.5em;text-align:center;font:48px/1.5 sans-serif;color:white;text-shadow:0 0 0.5em black} .youtube_play{background: red; border-radius: 50% / 16%; color: #FFFFFF; font-size: 1em; margin: 20px auto; padding: 0; position: relative; text-align: center; text-indent: 0.1em; transition: all 150ms ease-out; width: 68px; height: 45px;}.youtube_play:before{background: inherit; border-radius: 5% / 50%; bottom: 9%; content: ""; left: 0; position: absolute; right: 0; top: 9%;}.youtube_play:after{border-style: solid; border-width: 1em 0 1em 1.732em; border-color: transparent transparent transparent rgba(255, 255, 255, 0.75); content: ""; font-size: 15px; height: 0; margin: -1em 0 0 -1em; top: 50%; position: absolute; width: 0;}

" data-style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" data-width="560">Full View

இதையடுத்து வீடியோவில் இருந்த காரின் பதிவெண்ணை வைத்து போலீஸார் உரிமையாளரை தேடியனர். பின்னர் உரிமையாளரை விசாரித்து கார் மீது நடனமாடிய இளைஞர்களையும் கைது செய்தனர். காருக்குள் அமர்ந்து மதுபோதையில் காரை இயக்கிய இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

அனைவரும் தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்கும் வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காசியாபாத் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


newstm.in

Similar News