இளம் தலைமுறையினர் அசத்தல்.. உள்ளாட்சி தேர்தலில் கல்லூரி மாணவிகள் வெற்றி..!

இளம் தலைமுறையினர் அசத்தல்.. உள்ளாட்சி தேர்தலில் கல்லூரி மாணவிகள் வெற்றி..!

Update: 2022-02-22 15:23 GMT

கடந்த 19-ம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் திமுக மற்றும் அதனை கூட்டணி கட்சிகளே முன்னிலை பெற்று வருகின்றன.

இந்நிலையில், நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட இளம்பெண்கள் பலரும் வெற்றி பெற்று மக்களின் கவனத்தை பெற்றுள்ளனர்.

அந்த வகையில், சென்னை மாநகராட்சியின் 136வது வார்டில் போட்டியிட்ட 22 வயதே ஆன இளம் திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி 5-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய 22 வயது பொறியியல் பட்டதாரியான சினேகா என்பவர் 494 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஓசூர் மாநகராட்சி 13-வது வார்டில் திமுக வேட்பாளராக களமிறங்கிய சட்டக் கல்லூரி 3ம் ஆண்டு மாணவி யஷாஸ்வினி (22), 640 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட இளம்பெண்கள் பலரும் வெற்றி பெற்று மக்களின் கவனத்தை பெற்றுள்ளனர்.

Similar News