ரொனால்டோவுக்கு சவால் விடுக்கும் இளம்கோழி.. வீடியோவால் ரசிகர்கள் ஷாக் !!

ரொனால்டோவுக்கு சவால் விடுக்கும் இளம்கோழி.. வீடியோவால் ரசிகர்கள் ஷாக் !!

Update: 2022-04-18 20:45 GMT

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்கள் மிக அதிகம். ஆனால், உலக அளவில் கால்பந்து போட்டிக்கு தான் பல நாடுகளில் ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். கால்பந்திற்காக தன் உயிரைகூட தர பல ரசிகர்கள் தயாராக உள்ளனர். இந்நிலையில் கால்பந்து போட்டியில் ஜாம்பவானாக கிரிஸ்டினோ ரொனால்டோ தற்போதும் கலக்கி வருகிறார்.

மான்செஸ்டர் யுனைட்டெட் என்ற கிளப் அணியில் வீரராகவும், போர்ச்சுகல் தேசிய அணியின் கேப்டனாகவும் உள்ளார். ஆனால் இந்த செய்தி கால்பந்தை பற்றியோ, ரோனால்டோ பற்றியோ அல்ல.

அதாவது, சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ செமயாக வைரலாகி வருகிறது. வீடியோவில் ஒரு கோழி தான் இட்ட முட்டையை தன் காலில் வைத்து கிரிஸ்டினோ ரோனால்டோ ஸ்டைலில் தூக்கி போட்டு கால்பந்து விளையாடுகிறது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  

ஒரு சிறந்த கால்பந்து வீரர் கால்பந்தை எப்படி தூக்கி போட்டு விளையாடுவாரோ அப்படியோ இந்த கோழியும் தன் முட்டையை தூக்கி போட்டு விளையாடுகிறது. இந்த வீடியோ முழுவதும் கிராபிக்ஸ் வீடியோவாக இருந்தாலும் பார்க்க ரசிக்கும் படி இருப்பதால் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் செம வைரலாக பரவி வருகிறது.

newstm.in

 

Similar News