விருந்தில் கறி குறைவாக வைத்ததால் உருட்டுக் கட்டையால் தாக்கிய இளைஞர்கள்!!
விருந்தில் கறி குறைவாக வைத்ததால் உருட்டுக் கட்டையால் தாக்கிய இளைஞர்கள்!!
விருந்தில் குறைவாக கறி பரிமாறப்பட்டதால் எழுந்த பிரச்னையில், உருட்டுக் கட்டையால் தாக்கிய இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் காடம்பாடியைச் சேர்ந்த சேகர் (35) என்பவர் தனது சகோதரர் வீட்டு கறி விருந்திற்கு, தனது நண்பர்களை அழைத்திருந்தார்.
விருந்தின்போது சேகரின் நண்பர்கள் ஜெய்சங்கர் (40), சுந்தரமூர்த்தி (25) ஆகியோருக்கு குறைவாக கறி பரிமாறப்பட்டது. விருந்தில் தங்களுக்கு கறி அதிகமாக வைக்கவில்லை என ஜெய்சங்கரும், சுந்தரமூர்த்தியும் சேகரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நண்பர்கள், அங்கு கிடந்த உருட்டுக் கட்டையால் சேகரை சரமாரியாக தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இதில் காயமடைந்த சேகர், நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெளிப்பாளையம் போலீஸார், ஜெய்சங்கர், சுந்தரமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in