“உன் மனைவிக்கும், என் புருஷனுக்கும் தெரிஞ்சுடும்…” – ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!

“உன் மனைவிக்கும், என் புருஷனுக்கும் தெரிஞ்சுடும்…” – ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!

Update: 2022-04-09 20:00 GMT

சிவதாசன் - ஷிஜி (38) தம்பதியினர் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி மனைவி ஷிஜியை காணவில்லை என சிவதாசன் காவல்துறையிடம் புகாரளித்தார்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் காணாமல் போன ஷிஜியை தேடி வந்தனர். இந்நிலையில்  கொயிலண்டி ரயில் நிலையம் அருகேஆண், பெண் இருவரது சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்ததில் உயிரிழந்தது காணாமல் போனதாக அறியப்பட்ட சிவதாசனின் மனைவி ஷிஜி என தெரிய வந்தது. மேலும் ஷிஜியுடன் கூட இருந்த நபர் முச்சுக்குன்னுவைச் சேர்ந்த ரனிஷ் (34) என்பதும் தெரிய வந்தது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஷிஜிக்கும் ரனிஷுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததும், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கணவன் மனைவி போர்வையில் தனியாக குடும்பமே நடத்தி வந்ததுள்ளனர்.

தங்களது வீட்டுக்கு தெரிந்து பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டனர். இந்த சம்பவம் அப்பக்குதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News