உடற்பயிற்சியின் போது விபரீதம் - மாரடைப்பால் இளைஞர் உயிரிழப்பு..!!

உடற்பயிற்சியின் போது விபரீதம் - மாரடைப்பால் இளைஞர் உயிரிழப்பு..!!

Update: 2022-06-07 11:44 GMT

நம்மில் பலர் ஜிம்மில் பல மணி நேரம் செலவிட்டு வருகிறோம். ஜிம்மிற்கு செல்வது ஒரு ஃபேஷன் டிரெண்டாகிவிட்டது. யாரை கேட்டாலும் ஜிம்மிற்கு செல்கிறேன், புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறோம், தசைகளை வலிமையாக்குகிறேன் போன்றவற்றை சாதாரணமாக கூறுகின்றனர். தற்போது 14-15 வயதுடைய குழந்தைகள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை நாம் பார்க்க முடிகிறது 

இந்நிலையில், பட்டதாரி இளைஞர் ஜிம்மில் அதிக பளு தூக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிந்துள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு (27). இவர் பட்டப்படிப்பு முடித்த நிலையில் கணினி விற்பனை செய்யும் பணி செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் தினமும் வீட்டின் அருகே உள்ள ஒரு தனியார் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சிக்கு சென்று வந்துள்ளார்.

வழக்கம் போல் நேற்றும் உடற்பயிற்சிக்கு சென்றபோது அதிக எடை கொண்ட பயிற்சியை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்த சக நண்பர்கள் அவரை மீட்ட தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிக பளு தூக்கியதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News