செல்போனால் அரசு வேலை வாய்ப்பை இழந்த இளைஞர் !!
செல்போனால் அரசு வேலை வாய்ப்பை இழந்த இளைஞர் !!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சௌராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குரூப் 2 தேர்வில் 20 மாணவர்களுக்கு ஒரு தேர்வு அறை வீதம், 30 தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 600 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இங்கு நடைபெற்ற தேர்வில் 64 பேர் தேர்வு எழுத வரவே இல்லை.
தொடர்ந்து நடைபெற்ற தேர்வில் செல்போன் பயன்படுத்தி ஒருவர் வெளியேற்றப்பட்டார். அதாவது அங்குள்ள நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (31) என்பவர் தேர்வு எழுதும் போது தன்னுடன் தடை செய்யப்பட்ட செல்போனை மறைத்து வைத்திருந்துள்ளார்.
இதனை ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் கண்டுபிடித்ததால் தேர்வு அறையில் இருந்து தேர்வு எழுதாமல் போலீசார்களால் வெளியேற்றப்பட்டார். வேறு ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து செல்போனை ஆய்வு செய்துவரும் போலீசார்கள் மேலும் தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் 15% தேர்வர்கள் ஆப்சென்ட் என தெரியவந்துள்ளது. அதாவது, 9.94 லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில், 1.83 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவித்துள்ளனர்.
newstm.in