பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் இளைஞர் குத்திகொலை.. பதறவைக்கும் சிசிடிவி !!
பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் இளைஞர் குத்திகொலை.. பதறவைக்கும் சிசிடிவி !!
பட்டப்பகலில் சாலையில் வைத்து இளைஞர் ஒருவர் மர்ம கும்பல் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள பரபரப்பான சாலையில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் விரட்டியது. அதாவது, 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் நடந்து வந்த ஒருவர் திடீரென தான் வைத்திருந்த கத்தியை எடுத்து இளைஞரின் இடுப்புப் பகுதியில் குத்தினார்.
இதனையடுத்து அந்த இளைஞர் ஓட முயன்றப்போது கத்திக்குத்து காயத்துடன் கீழே விழுந்தார். அங்குவந்த மேலும் இரண்டு நபர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடினார்.
இந்த தாக்குதலின்போதும் அவர் சாலையில் உயிருக்கு போராடியப்போதும், சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்ற போதிலும் அவரை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. இதனால் சிறிது நேரத்தில் அங்கேயே அந்த இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பின்னர் தகவல் அறிந்து சென்ற போலீசார் இளைஞரின் உடலை மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சொத்து தகராறு காரணமாக அந்த இளைஞரின் உறவினர்களே அவரை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எனினும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
newstm.in