60 லட்ச ரூபாய் பணத்துடன் சாலையில் சுற்றித்திரிந்த இளைஞர்கள்!!

60 லட்ச ரூபாய் பணத்துடன் சாலையில் சுற்றித்திரிந்த இளைஞர்கள்!!

Update: 2022-04-10 17:15 GMT

சென்னையில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 60 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ஓட்டேரி காவல் நிலைய போலீஸார் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருவர் கையில் பையுடன் வெகுநேரமாக ரயில் நிலையம் அருகில் நின்றுகொண்டிருந்தனர்.

பார்ப்பதற்கு வெளிமாநில நபர்கள் போல் தோற்றம் கொண்டதால் சந்தேகமடைந்த ஓட்டேரி போலீஸார் அவர்கள் இருவரையும் அழைத்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான பேசியுள்ளனர்.இதையடுத்து சந்தேகமடைந்த போலீஸார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இருவரையும் ஓட்டேரி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் இருவரும் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அதில் ஒருவர் பெயர் நாகராஜ். தெலங்கானா மாநிலம் குடிமல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், மற்றொரு பெயர் நரேந்திர குமார்.

இதனையடுத்து அவர்கள் கைப்பையில் வைத்திருந்த ரூபாய் 60 லட்சத்து முப்பத்தி ஓராயிரம் ரூபாயை ஓட்டேரி போலீஸார் கைப்பற்றி சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் அதனை ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்த பணம் ஹவாலா பண பரிமாற்றத்திற்காக கொண்டு வரப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

newstm.in

Similar News