பட்டப்பகலில் பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி நகையை பறித்துச் சென்ற பைக் கொள்ளையர்; சிசிடிவி வீடியோ

பட்டப்பகலில் பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி நகையை பறித்துச் சென்ற பைக் கொள்ளையர்; சிசிடிவி வீடியோ

Update: 2021-08-28 04:45 GMT

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் பட்டப்பகலில் பெண்ணை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற பைக் கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர்.

தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு பெண்மணியை திருப்பத்தில் மறைந்திருந்து மடக்கிய கொள்ளையர்கள் அந்தப் பெண்ணின் எதிர்ப்பை மீறி நகையைப் பறித்துச் சென்ற காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து குவாலியரின் படவ்-காவல் நிலையத்தில் டவுன் இன்ஸ்பெக்டர் விவேக் அஸ்தானா கூறுகையில், அந்த பெண் தனது மகனை டியூஷனில் சேர்த்துக் கொண்டிருந்த போது இரண்டு கடத்தல்காரர்களால் செயின் இழுக்கப்பட்டது. கடத்தல்காரர்களுக்கு எதிராக எங்களிடம் ஆதாரம் உள்ளது, திருடர்களை விரைவில் கைது செய்படுவார்கள் என்றார்.


 

Tags:    

Similar News