'ஒரு பிராமின்' சுரேஷ் ரெய்னா சர்ச்சை பேச்சால் கடும் விமர்சனம் !!

'ஒரு பிராமின்' சுரேஷ் ரெய்னா சர்ச்சை பேச்சால் கடும் விமர்சனம் !!

Update: 2021-07-23 07:43 GMT

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் வர்ணையாளராக பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் ஓய்வுபெற்ற வீரர் சுரேஷ் ரெய்னா ‘நான் ஒரு பிராமின்’ என்று கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் இன்றி இந்தாண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தாண்டு சிஎஸ்கே வீரர் ரெய்னா வர்ணனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், நான் ஒரு பிராமின் என்று கூறியதாகவும் சென்னை கலாச்சாரத்தை பிராமண அடையாளத்துடன் கொண்டு சேர்த்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதாவது, வர்ணனையில் இருந்த ரெய்னாவிடம் அவர் சிஎஸ்கே அணிக்காக பல ஆண்டுகள் ஆடியதால் சென்னையுடனான உங்கள் தொடர்பு என்ன என்று கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், ஆம், நானும் பிராமின் தான் என்று நினைக்கிறேன். நான் 2004 முதல் சென்னையில் ஆடிவருகிறேன். எனக்கு இந்த கலாச்சாரம் பிடித்துள்ளது. என் அணி சக வீரர்களை நேசிக்கிறேன்.

நான் அனிருதா ஸ்ரீகாந்த்துடன் ஆடியுள்ளேன், பத்ரிநாத், எல்.பாலாஜியுடன் ஆடியிருக்கிறேன். சிஎஸ்கேவில் நல்ல நிர்வாகம் உள்ளது. நாங்கள் எங்களைக் கண்டுப்பிடித்துக் கொள்ள நிறைய உரிமை உள்ளது. நல்ல கலாச்சாரம், அதை நேசிக்கிறேன். சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருப்பது என் அதிர்ஷ்டம் என்றார்.

நான் ஒரு பிராமின் என்றும், சென்னை கலாச்சாரத்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்துடன் அடையாளப்படுத்தியும் அவர் பேசியதாக சமூக ஊடகங்களில் ரெய்னாவை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அவரை கொண்டாடிய சிஎஸ்கே ரசிகர்கள் கூட ரெய்னாவை விமர்சிக்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

அதாவது, அவர் தன்னுடன் விளையாடிய வீரர்கள், சென்னை கலாசாரத்தை பற்றி பேசியிருக்கலாம். ஆனால், எதற்கு இந்த சாதிக்குறிப்பீடு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


newstm.in

Tags:    

Similar News