மாஸ்க் இல்லைன்னா ரூ.200 அபராதம்! எச்சில் துப்பினால் ரூ.500!

மாஸ்க் இல்லைன்னா ரூ.200 அபராதம்! எச்சில் துப்பினால் ரூ.500!

Update: 2021-04-10 11:53 GMT

தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று, திடீரென மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் திருவிழாவில் எந்தவிதமான சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்காமல் மிஸ்டர் பொது ஜனம் சுதந்திரமாக கூட்டத்தோடு கூட்டமாக சுற்றி திரிந்ததன் விளைவாக பல அப்பாவிகளும் கொரோனா தொற்றுக்கு ஆளாகிறார்கள். மாஸ்க் அணியாமல் கூட்டத்தில் வேடிக்கைப் பார்த்து வாழ்க கோஷம் போட்டவர்கள் மீண்டும் ஊரடங்கை கொண்டு வந்து விடுவார்களோ என்கிற அச்சத்துடனேயே எல்லோரும் இருக்கிறார்கள்.

இந்நிலையில், சென்னையில் பொது இடங்களில் எச்சில் துப்பினால், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால் ரூ.500 அபராதமும், மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.மக்கள் அதிகளவில் கூடும் வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம் போன்ற இடங்களில் இந்த விதிகளை பின்பற்றாவிட்டால் ரூ.5000 வரையில் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.

சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் தினந்தோறும் ரூ.10 லட்சம் ரூபாய் அபராத தொகையை வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் தலா 1.50 லட்சம் தினசரி அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் தினசரி 1.25 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News