காதலனை நம்பிச் சென்ற பள்ளி மாணவி.. நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்!!

காதலனை நம்பிச் சென்ற பள்ளி மாணவி.. நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்!!

Update: 2020-02-24 23:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே 11ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேப்பனப்பள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் அதே பள்ளியில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மாணவியை தியேட்டருக்கு சென்று திரைப்படம் பார்க்கலாம் என மாணவர் அழைத்துச் சென்றார். ஆனால் இருவரும் சினிமாவிற்குச் செல்லாமல் ஆந்திர எல்லையில் உள்ள ஏரிக்கரைக்கு சென்றுள்ளனர். ஏரிக்கரைக்கு சென்ற இருவரும் அங்கு நீண்டநேரம் அமர்ந்து பேசியுள்ளனர். அப்போது மாணவன் அவனது நண்பர்களுக்கு போன் செய்து ஏரிக்கரைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதனையடுத்து மேலும் இருவர் அங்கு வந்துள்ளனர். அதுவரை விபரீதம் தெரியாமல் இருந்த மாணவியை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடலாம் என அழைத்துச் சென்றார். ஆனால் இங்கே அமர்ந்து உணவு சாப்பிடலாம் என முடிவு செய்து ஹோட்டலுக்கு சென்று பார்சலில் சாப்பாடு வாங்கி வருவதாக கூறி மாணவியின் காதலனும், அவரது நண்பரும் சென்றனர்.

அந்த ஏரிக்கரை பகுதியில் மாணவியும் காதலனின் நண்பரும் தனியாக இருந்தனர். இந்த சமயத்தில் மாணவியுடன் இருந்த மற்றொரு மாணவன் மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்துள்ளார். மது குடித்து சில நிமிடங்களில் மயக்கமடைந்த மாணவியை, அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் அங்கு வந்த மாணவியின் காதலனும் அவரது நண்பனும், மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தார்.

அதன் பின்னர் மதுபோதையில் மயக்கத்தில் இருந்த மாணவியை மாலையில் மூன்று பேரும் இணைந்து வேப்பனப்பள்ளிக்கு வந்து விட்டுச் சென்றுள்ளனர். இதனையடுத்து தனக்கு நடந்த கொடுமையை அறிந்த மாணவி, பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல் துறையினர் மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்துள்ளனர்.

newstm.in

Tags:    

Similar News