சென்னையில் ஒரு “க்ராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க்” ரோடு ! யாரு பார்த்த வேலைப்பா இது?
சென்னையில் ஒரு “க்ராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க்” ரோடு ! யாரு பார்த்த வேலைப்பா இது?
சென்னையிலிருந்து வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாகப் பெங்களூருக்குச் செல்லும் சாலைக்கு பூவிருந்தவல்லி வரையிலும் சென்னை மாநகரத்திற்குள் பெரியார் ஈ.வெ.ரா.சாலை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. அந்த சாலை செல்லும் வழியில் உள்ள வேப்பேரியில் தான் திராவிடர் கழகம் தலைமை அலுவலகம் உள்ளது. அதன் உள்ளே தான் பெரியார் நினைவிடமும் அமைந்துள்ளது.
சென்னை நகரத்திற்குள் இந்த சாலையை பெரியார் ஈ.வெ.ரா.சாலை என்றே எழுதப்பட்டிருக்கும். திடீரென்று முளைத்துள்ள ஒரு சாலைப் பலகையில் ஈ.வெ.ரா.பெரியார் சாலை என்பதற்குப் பதிலாக Grand Western Trunk Road என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
கீழே கோயம்பேடு, நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு செல்லும் வழிக்கான குறியீடும் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பலகையைப் படம் பிடித்து சமூகத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். யாருப்பா இந்த பெயர் மாற்றம் செய்தது? என்ற கேள்வியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
பிரபல தொழிலதிபர் சுரேஷ் சம்மந்தமும் இந்தப் படத்தை ட்விட்டரில் பகிர்ந்து ,” பெரியார் ஈ.வெ.ரா.சாலை எப்போது கிராண்ட் வெஸ்டர்ன் ரோடாக மாறியது?,” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரியார் ஈவேரா சாலை எப்போது கிராண்ட் வெஸ்டர்ன் ரோடாக ஆக மாறியது? pic.twitter.com/JgsBXdnV3J
— Suresh Sambandam (@sureshsambandam) April 12, 2021
பெரியார் ஈவேரா சாலை எப்போது கிராண்ட் வெஸ்டர்ன் ரோடாக ஆக மாறியது? pic.twitter.com/JgsBXdnV3J
— Suresh Sambandam (@sureshsambandam) April 12, 2021