காதல் திருமணத்தில் ஏற்பட்ட பகை.. பழிக்குபழியாக ஜாமினில் வந்த இளைஞர் வெட்டிக் கொலை
காதல் திருமணத்தில் ஏற்பட்ட பகை.. பழிக்குபழியாக ஜாமினில் வெளிவந்த இளைஞர் வெட்டிக் கொலை
திருச்சி மாவட்டம், முசிறி அருகே திருஈங்கோய்மலை சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர் அதே கிராமத்தை சேர்ந்த தனது உறவினர் பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த காதல் திருமணத்திற்கு சுரேஷ் மனைவியின் தாத்தா அம்மையப்பன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த தகராறில் சுரேஷ், தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து அம்மையப்பனை வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், போலீசாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த சுரேஷ், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஜாமினில் வெளியே வந்துள்ளார். பின்னர், வெளியூரில் மனைவியுடன் அவர் வசித்து வந்துள்ளார்.
newstm.in