கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு நினைவாற்றல் குறைவு!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு நினைவாற்றல் குறைவு!!

Update: 2022-01-25 09:53 GMT

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் அவர்களுக்கு நினைவாற்றல் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமைக்ரான் குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே ஒமைக்ரானின் புதிய அறிகுறிகள் மற்றும் விளைவுகள் பற்றி நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன

இது தொடர்பாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு (Omicron Patients) ஏற்படும் உடல் உபாதைகள் நீண்ட காலம் நீடிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

டெய்லி மெயிலில் வெளியான அறிக்கையின்படி, கொரோனா நோயின் அறிகுறிகள் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், (Brain Fog) நினைவாற்றல் பாதிப்பு பிரச்னை மக்களிடம் காணப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நினைவாற்றல் பாதிப்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடந்த காலங்களில் நடந்த சில நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாத நிலை கூட ஏற்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் தங்கள் பரிசோதனையின் போது அத்தகைய அறிகுறிகளை உணரவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகே அவை கண்டறியப்பட்டுள்ளது.  

நினைவாற்றல் பாதிப்பின் தாக்கத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர் சுமார் 6 முதல் 9 மாதங்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பக்கூடும். நீண்ட நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தசை வலி, சீரற்ற இதயத்துடிப்பு, இருமல் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் இருக்கும்.

மறுபுறம்,நினைவாற்றல் பாதிப்பின் தாக்கம் உள்ளவர்களுக்கு தூக்கமின்மை, வேலை செய்ய இயலாமை மற்றும் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாத நிலை ஆகியவை ஏற்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

newstm.in

Similar News