கள்ளக்காதலுக்கு இடையூறு.. கணவனை கொன்று மகள் மீது பழி போட்ட மனைவி!!
கள்ளக்காதலுக்கு இடையூறு.. கணவனை கொன்று மகள் மீது பழி போட்ட மனைவி!!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஒருவாப்பட்டி கிராமத்தில் படவெட்டி (40) - நளா (37) என்ற தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகள்களும் 1 மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு படவொட்டி வீட்டில் கொலை செய்யப்பட்டார். அப்போது, குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மகளைக் கெடுக்க முயன்றதாகவும், தற்காப்புக்காக அவரே தலையில் கல்லை போட்டு மகளே கொலை செய்ததாகவும் படவெட்டியின் மனைவி கூறியுள்ளார்.
ஆனால் அந்த பதிலில் தெளிவு இல்லாததால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த சிறுமியை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது அந்த சிறுமி பயத்தில் ஏதேதோ உளறிக் கொண்டிருந்துள்ளார். சிறுமியின் கொடுத்த தகவலின் மூலம் அவர் கொலை செய்யவில்லை என்றும் வேறு யாரோ இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் போலீசார் சந்தேகம் வலுத்தது. அதன் பின்னர், இந்த கொலையில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது படவொட்டியின் மனைவியான நளாவுக்கு அவரது அக்காவின் மருமகனுடன் தகாத உறவு இருந்ததும், அதற்கு இடையூறாக இருந்ததால் கணவனைக் கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து போலீசாருக்கு இன்னொரு அதிர்ச்சி தரும் தகவல் தெரிய வந்துள்ளது. தான் கொலை செய்தால் எனக்குத் தண்டனை அதிகமாகி மருமகனுடன் இருக்க முடியாமல் போய் விடும் என்பதற்காக மகள் கொன்று விட்டதாகச் சொல்லிவிட்டால் அவரை குறைந்த பட்ச தண்டனையுடன் வெளியே அனுப்பி விடுவார்கள் என்றும் பக்காவாக பிளான் போட்டதையும் அறிந்தனர்.
பின்னர் கணவரை கொலை செய்த மனைவியை கைது செய்தனர். கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்து அந்த பழியை மகள் மீது தாய் சுமர்த்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in