பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கலைன்னா வங்கி கணக்கும் காலி!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!
கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் ரூ. 10 ஆயிரம் அபாரதம் விதிக்கப்படாலம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால், குறிப்பிட்ட நபரின் பான் கார்டு பயன்ற்றதாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் ரூ. 10 ஆயிரம் அபாரதம் விதிக்கப்படாலம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்கிற சட்டத்தை மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு கொண்டு வந்தது. ஒருவரே பல பான் கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபடுவதை தடுக்க இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.ஒருவர் தன் பெயரில் பல பான் கார்டுகளை வைத்திருந்தால், வரி ஏய்ப்பு மற்றும் கடன் ஏய்ப்பு உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதை தடுக்கும் நோக்கிலே பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பத்து கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்தது.
இதற்காக மத்திய நேரடி வரி ஆணையம் பலமுறை கால அவகாசம் வழங்கியது. அது பலமுறை நீடிக்கவும்பட்டது. இறுதியாக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நடப்பாண்டு மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவின் படி, நீடிக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் பான் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்றால், மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும், பான் காருடன் ஆதார் எண் இணைக்கப்பட்ட பிறகே வங்கி கணக்குகள் செயல்பாட்டுக்கு வரும் எனவும் வருமான வரித்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சட்டப்படி பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால், குறிப்பிட்ட நபரின் பான் கார்டு பயன்ற்றதாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in