வேகமெடுக்கும் கொரோனா.. ஸ்டான்லியில் 16 டாக்டர்கள், 4 நர்சுகளுக்கு தொற்று உறுதி..!

வேகமெடுக்கும் கொரோனா.. ஸ்டான்லியில் 16 டாக்டர்கள், 4 நர்சுகளுக்கு தொற்று உறுதி..!

Update: 2022-01-06 15:35 GMT

சென்னையில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தொற்று பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 481 பேருக்கு தொற்று பரவியுள்ளது.

சென்னை ராயபுரம் மண்டலத்தில் உள்ள குடிசைப் பகுதியில் தொற்று அதிகரித்துள்ளது. இது தவிர, 52-வது வார்டில் உள்ள மிண்ட் மருத்துவமனை குடியிருப்பில் 14 பேருக்கும், ஏழு கிணறில் 13 பேருக்கும் தொற்று பரவி உள்ளது. ஈ.வே.ரா. பெரியார் சாலை நால்ரோடு பகுதியிலும் தொற்று அதிகரித்துள்ளது.


இந்நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றும் 2 டாக்டர்கள், 14 பயிற்சி டாக்டர்கள், 4 நர்சுகள் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் 138 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று எந்த இடத்தில் அதிகமாக பரவுகிறது என்பதை கண்டறிந்து, அந்தப் பகுதியில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News