அவசரத்தால் ஏற்பட்ட விபரீதம்.. ஓடும் ரயிலில் ஏற முயன்ற ஸ்டேஷன் மாஸ்டர் பலி..!

அவசரத்தால் ஏற்பட்ட விபரீதம்.. ஓடும் ரயிலில் ஏற முயன்ற ஸ்டேஷன் மாஸ்டர் பலி..!

Update: 2022-01-08 16:39 GMT

ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி தண்டவாளத்தில் விழுந்த ரயில் நிலைய அதிகாரி, ரயில் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் கதிஹர் மாவட்டத்தில் உள்ள சல்மாரி ரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் அப்பாஸ் நாராயணன் கான். இவர், கதிஹார் ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து ரயில் மூலம் சல்மாரி ரயில் நிலையத்திற்கு செல்வது  வழக்கம்.

இதுபோல் நேற்று, தன்னுடைய பணியை மேற்கொள்வதற்காக வீட்டில் இருந்து கதிஹார் ரயில் நிலையம் வந்துள்ளார். அதிகாலை 5 மணியளவில், மேற்கு வங்கத்தில் இருந்து பஞ்சாப் செல்லும் நியூ ஜல்பைகுரி - அமிர்தசரஸ் ரயில் கதிஹார் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளது. நாராயணன் கான், கதிஹர் ரயில் நிலைய பிளாட்ஃபார்ம் வந்தபோது அந்த ரயில் புறப்பட்டது.

அதை பிடிப்பதற்காக வேகமாக ஓடிச்சென்ற நாராயணன் கான் ரயிலில் ஏற முயன்றபோது, கால் இடறி தண்டவாளத்திற்குள் விழுந்தார். இதில், சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நாராயணன் கான், உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், நாராயணன் கான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News