ஆலோசனை கூட்டத்தில் டென்ஷனாகி, ஆவணங்களை வீசி எறிந்த கோட்டாட்சியர் செளந்தர்யா! ஆதாரமிருக்கா என ஆவேசம்!!
ஆலோசனை கூட்டத்தில் டென்ஷனாகி, ஆவணங்களை வீசி எறிந்த கோட்டாட்சியர் செளந்தர்யா! ஆதாரமிருக்கா என ஆவேசம்!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கல்குவாரியை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்து அப்பகுதி மக்கள் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் இதுவரை கல்குவாரியை மூட எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக கருவேலம்பட்டியில் அமைந்துள்ள கல்குவாரியால் விவசாயம் பாதிக்கப்படுவதாகக் கூறி, கிராம மக்கள் புகார் அளித்தனர்.
இது தொடர்பான பேச்சுவார்த்தை திருமங்கலம் கோட்டாட்சியர் சௌந்தர்யா தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கிராம பிரதிநிதி ஒருவர், கோட்டாட்சியர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகக் கூறி, குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதனால் ஆவேசம் அடைந்த கோட்டாட்சியர் அந்நபரிடம் குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை கேட்டார். ஆனால் அந்த நபர் அமைதி காத்தார். இதனால் கோபமடைந்த கோட்டாட்சியர், வாதிட்டவரை நோக்கி கோப்புகளை வீசி எறிந்து சென்றார்.
இதனையடுத்து கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டிருந்த கிராம மக்கள், கல்குவாரி மூடும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறி கலைந்து சென்றனர்.
newstm.in