அதிரடி! இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் விலை ரூ.25 குறைப்பு!!

அதிரடி! இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் விலை ரூ.25 குறைப்பு!!

Update: 2021-12-29 16:31 GMT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், கடந்த மாதம் மத்திய அரசு கலால் வரியை குறைத்தது. பெட்ரோல் மீதான வரியில் 5 ரூபாயும், டீசல் மீதான வரியில் 10 ரூபாயும் குறைக்கப்பட்டது.

இதேபோல் மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தன.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் பெட்ரோல் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

2022-ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வருவதாக ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்திருக்கிறார். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த விலை குறைப்பு சலுகை இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்களின் பாதிப்பைக் குறைக்க விலை குறைப்பை அமல்படுத்துவதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

newstm.in

Similar News