அதிரடி! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி!!

அதிரடி! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி!!

Update: 2022-01-31 09:10 GMT

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

சென்னை தியாகராயர் நகரிலுள்ள பாமக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டார்.முன்னாள் மத்திய அமைச்சர் .கே.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும், சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்களில் பாமக தனித்து போட்டியிடும் என்று தெரிவித்தார்.

இந்த தேர்தலில், பெண்கள், வழக்கறிஞர்கள், புது முகங்கள் என பல்வேறு தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தென் மாவட்டங்களிலும் பாமகவுக்கு செல்வாக்கு உள்ளதாக குறிப்பிட்ட ஜி.கே.மணிநகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மற்ற கட்சி வேட்பாளருக்கு யாராவது உதவி செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

newstm.in

Similar News