மது விலை அதிரடி குறைப்பு.. தமிழகத்திற்கான லாபத்தை தடுத்த ஆந்திர அரசு !!

மது விலை அதிரடி குறைப்பு.. தமிழகத்திற்கான லாபத்தை தடுத்த ஆந்திர அரசு !!

Update: 2021-12-20 20:15 GMT

ஆந்திராவில் இருந்து மதுப்பிரியர்கள் தமிழகம் படையெடுப்பதை தவிர்க்க விலையை குறைத்துள்ளது ஆந்திர அரசு.

டாஸ்மாக் நிறுவனம் மூலமாக தமிழகத்தில் மது விற்பனையை அரசு நடத்தி வருவதுபோல, ஆந்திர மாநிலத்தில், ஆந்திரப் பிரதேஷ் ஸ்டேட் பீவரேஜஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஏபிஎஸ்பிசிஎல்) நிறுவனம் மூலமாக மது விற்பனையை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், ஆந்திராவில் மதுவகைகளின் விலை 50 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டது. இது மதுபிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் தமிழக – ஆந்திர எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆந்திர மதுப்பிரியர்கள் மது வாங்குவதும், அங்கிருந்து ஆந்திராவிற்கும் மதுவை கடத்துவதாகவும் இருந்து வந்தனர். இது, ஆந்திரா அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. எனவே தமிழகம் சென்று மதுவாங்கும் போக்கை தடுக்கும் நடவடிக்கைகளை ஆந்திரா மாநில அரசு மேற்கொண்டது.

அதாவது, ஆந்திர அரசு மதுபானங்களின் விலையை தற்போது 20 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதனால் கள்ளச்சந்தையில் மது விற்பனை குறையும் என்றும் ஆந்திரா அரசு கூறியுள்ளது.

newstm.in


 

Tags:    

Similar News