"ஆக்‌ஷன் கிங்" அர்ஜுனுக்கு தொற்று உறுதி.. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்..!

"ஆக்‌ஷன் கிங்" அர்ஜுனுக்கு தொற்று உறுதி.. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்..!

Update: 2021-12-15 05:00 GMT

நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர், தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் ‘ஆக்‌ஷன் கிங்’ என்று அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். இவர், தான் நடித்த படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். தமிழ் தவிர தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் தொகுப்பாளராக உள்ளார். இதைத்தவிர சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக நடிகர் அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அர்ஜுன் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது: “நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன்.

என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் நலமாக உள்ளேன். தயவுசெய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Similar News